Editorial / 2019 மே 19 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
வெசாக் வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்களுடன் ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, மதுவரி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பொறுப்பதிகாரி எஸ்.தயாலேஸ்வரகுமார் தெரிவித்தார்.
மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், வாகரை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இன்று (19) காலை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 84 மதுபான போத்தல்களுடன் 3 பேரும் சட்டவிரோத பியர் போத்தல்கள் மற்றும் டின்களுடன் 2 பேரும் 1 லீற்றர் 500 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவருமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள், களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .