Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வரவு –செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும்போது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் கூட்டம், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (13) நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கல்வி, கால்நடை ஆகியவற்றின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளவேண்டிய பங்களிப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியனவற்றுக்கு எதிர்கால வரவு -செலவுத்திட்டம் மூலம் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
என்ட பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டதுடன், அவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான திலகராஜ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
38 minute ago