Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவு நேர பஸ் சேவை, நேற்றுத் திங்கட்கிழமை முதல் இரவு 8.20க்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
412 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பல காலங்களுக்கு பின்னர் ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மக்களதும், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், இசை நடனக் கல்லூரி மற்றும் கல்வியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி, இரவு 8.20க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்புக்கு இரவு 9.30 க்கும் பஸ் சேவை இடம்பெறவுள்ளது.
இவ்வாறு இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், ஒரு வழிக்கட்டணமாக 546 ரூபாய் அறவிடப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம். கிருஸ்ணராஜா, பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


12 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
32 minute ago