Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழும்; பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் அமர்வு நடைபெறவுள்ளதாக மேற்படி செயலணியின் மட்டக்களப்பு மாவட்டக் குழுச் செயலாளர் ஏ.காண்டீபன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த 09ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றன.
ஆயினும், இக்கருத்தறியும் அமர்வு, மாவட்டத்திலுள்ள 04 முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றிலேனும் நடத்தப்படாது புறக்கணிக்கப்பட்டதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதிருப்தி தெரிவித்து, செயலணியிடம் மகஜரும் கையளித்தது. அத்துடன், இந்த அமர்வு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவொன்றில் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியது.
இக்கோரிக்கையை ஏற்று இந்த அமர்வுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அமர்வு தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் 0114232857 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு பொதுமக்கள் அறிய முடியும்.
11 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
31 minute ago