2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் இருவருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலுக்குள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த ஒருவரும் புதிய காத்தான்குடி டிப்போ வீதியைச் சேர்ந்த சிறுவனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, இவர்களுக்கு டெங்குச் காய்ச்சலென  அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்;தியர் எம்.எஸ்.ஜாபிர் தெரிவித்தார்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அலட்சியமாக இருக்கவேண்டாமெனவும் பொதுமக்களை வைத்தியர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X