2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 மில்லியன் ரூபாய் செலவில்; உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின்  ஆலோசனைக்கமைய இந்த ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தனியான உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம் நிறுவவேண்டிய அவசியம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு ஆலோசனைச் சபையின் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில்  விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில்  கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன,; கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் முன்னாள் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.நாகையா, உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு பிரதம உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.ரி.அபுதாலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X