2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.நா. பிரதிநிதிகள்

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தனர்.

இதன்போது, இவர்கள் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் வைத்து கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குடும்பங்களின் உறவினர்களை சந்தித்தனர்.

இங்கு, மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன மற்றும் கடத்தவர்களின் 570க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது, மண்டபத்துக்கு வெளியே காணாமல் போன மற்றும் கடத்தவர்களின் உறவினர்கள் காணாமல் போன மற்றும் கடத்தவர்களின் புகைப்படங்களை தாங்கி நின்றதுடன், காணாமல் போன மற்றும் கடத்தவர்களை தேடி கண்டுபிடித்து தருமாறும் அவர்களின் நிலைமையை வெளிப்படுத்துமாறும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்

13 மனித உரிமை அமைப்புக்களை உள்ளடக்கிய வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்புக்குழு,  காணாமல் போன மற்றும் கடத்தவர்களின் உறவினர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .