Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தரநியமங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அலுவலர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டு நாள் செயலமர்வு, மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சி மண்டபத்தில் இன்று (08) ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
நாட்டில் நல்ல பிரஜைகளாக சிறுவர்களை உருவாக்குவதே நம்முன்னுள்ள கடமை என மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் எஸ். ரங்கநாதன் தெரிவித்தார்.
அங்கு அலுவலர்கள் மத்தியில் மேலும் கூறிய உதவி மாவட்டச் செயலாளர், 'பெற்றோரிடம் கேட்டால் தம் பிள்ளைகளை வைத்தியராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக உருவாக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.
ஆனால், இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகளை சிறந்த நல்லொழுக்கமுள்ள மனுசனாக, மனுஷியாக உருவாக்குவதே இன்றுள்ள சமகாலத் தேவையாகும்.
பதவி, அந்தஸ்து அடிப்படையில் மனிதர்களை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் சேவையை விட ஒரு மனிதாபிமானமுள்ள சிறந்த பிரஜையாக உருவாக்குவதால் கிடைக்கும் மகோன்னத சேவையை அளவிட முடியாது.
நல்ல மனிதனல்லாத ஒரு வைத்தியரோ அல்லது பொறியியலாளரோ அல்லது அதைவிட பெரிய பதவி வகிக்கின்ற ஒருவரால் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் கிட்டப்போவதில்லை.
நல்லதொரு மனிதனால்தான் நல்ல மாற்றத்தை குடும்பத்திலும், சமூகத்திலும் நாட்டிலும் கொண்டு வர முடியும்.
அதனாலேதான் மற்றெல்லா அபிவிருத்திகளையும் விட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் நாம் கூடுதல் கரிசனை காட்ட வேண்டியுள்ளது.
அரசாங்க அலுவலர்களாக ஊதியம் பெறுகின்ற நீங்கள் சிறந்த ஒரு சிறந்த விழுமியங்களைக் கொண்ட சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு உங்களது கடமை நேரத்தை செலவிட வேண்டும். அதனை நீங்கள் செவ்வனே செய்தால் எதிர்கால சமூகத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago