2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் வாகனச் சாரதி கொலை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு வாகனச் சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரின் பார் வீதியை அண்டியுள்ள ஆனந்தா  ஒழுங்கையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான சோமசிறி விஜித் ஜெயந்த் (வயது  34) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை பின்தொடர்ந்த இருவர், இவரை வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X