Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வீதி விபத்துகள் காரணமாக 59 பேர் உயிரிழந்ததுடன், 300 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.
வீதி விபத்துகளை இல்லாமல் செய்யும் செயற்றிட்டம் காத்தான்குடியில் புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களாக சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் அடங்குகின்றனர்.
வாகன விபத்துகளில் சிக்கிய பலர் அங்கவீனர்களாகியுள்ளனர்.
எனவே, வாகன விபத்துகளை இல்லாமல் செய்வதற்கு சமூக மட்டத்தில் விழிப்புணர்வு அவசியம் எனவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025