2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. சிறைக்கைதிகளுக்கு தியான பயிற்சி

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பௌர்ணமி தினத்தையொட்டி சிறைச்சாலைகள் திணைக்களம் உலக வாழும் கலைகள் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கான ஒரு நாள் தியான பயிற்சி முகாம் இன்று காலை சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்றது.

இதில்,மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. சந்திரமணி சிவபாதம் பிரதம அதிதியாகவும் சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.பிரபாகரன், வாழும் கலைகள் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சட்டத்தரணி கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,உலக வாழும் கலைகள் நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தென்னியந்தியாவைச் சேர்ந்த கணேஸ் குருஜீ தியானப் பயிற்சியை நடத்தி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X