2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு.வில் வானொலி அறிவிப்பாளர் டிப்ளோமா பயிற்சி நெறி

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவக கிளையில் வானொலி அறிவிப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஆறு மாத கால டிப்ளோமா பாடநெறியொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

தகவல் ஊடக அமைச்சின் அனுசரணையுடன் இந்திய இதழியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் இக்கற்கை நெறிகள் நடைபெறவுள்ளன.

கற்கை முடிவில் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் ஊடக நிறுவனங்களில் உள்ளக பயிற்சியை மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது.

ஊடகத் துறையில் நீண்டகால அனுபவமிக்க சிரேஷ்ட அறிவிப்பாளர்களால் விரிவுரைகள் நடத்தப்படும். களப் பயிற்சிகளுடன் கூடிய இப்பயிற்சி நெறியானது செய்முறை பயிற்சிகள், குரல் வளமூட்டல், கலையக செயற்பாடுகள், செய்தி மற்றும் நேர்காணல், நிகழ்ச்சித் தொகுப்பு, ஒலி தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  

ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். 065- 2222832, 071-2164061, 075-8265824.

இதேவேளை, புதிய டிப்ளோமா கற்கை நெறிகளான  புகைப்படக்கலை, திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் வீடியோ தயாரிப்பு, குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பு, பத்திரிகைத் துறை மற்றும் செய்தி சேகரிப்பு ஆகியவற்றுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X