2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்.மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை

Kogilavani   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

'ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2017ஆம் ஆண்டு, வறுமை ஒழிப்பு வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமையை ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்று, பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பதினாறு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட வீதிகள், வடிகான்கள், ஆற்று அணைக்கட்டு, கலாசார மண்டபம், புகையிரத கடவை என்பவை, மக்களின் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

'கடந்த 2016ஆம் ஆண்டு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பொருளாதார திட்டமிடல் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிகள் மூலம், நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக இவ்வாண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.   

இதேவேளை,  இந்த வருடம் ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. இதன் நூற்றாண்டு விழா நிகழ்வுகள், நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன்விரும்பிகள், பிரதேச மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X