Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மணல் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியில் மணல் அகழ்வை நிறுத்தக்கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் பிரதேச விவசாயிகள், இன்று (25) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளை தடுத்து நிறுத்தி, வயல் பகுதிகளை பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியை புனரமைக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை, கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதால் இந்த அழிவுகளை எதிர்கொள்வதாகவும் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுகளே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1,267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
41 minute ago
1 hours ago