2025 மே 23, வெள்ளிக்கிழமை

மணல் கடத்திய மூவர் கைது; இயந்நிரங்களும் கைப்பற்றப்பட்டன

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றாணமடு ஆதாள்ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய மூவரை மட்டக்களப்பு மாவட்ட மோசடி ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளதுடன், மணல் ஏற்றிய மூன்று உழவு இயந்திரங்களையும் கைப்பற்றயுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட மோசடி ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரையின்கீழ் மோசடி ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரணதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள், மணல் ஏற்றிய உழிவு இயந்திரங்கள் என்பன வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X