2025 மே 08, வியாழக்கிழமை

மண்முனைப் பற்று பாதீடு: மீண்டும் தோற்கடிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு   - மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை, இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை, சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கத்தால் நேற்று (04) சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது, தவிசாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு உறுப்பினர்கள் உட்பட மூவர் மாத்திரமே வரவு – செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினருமாக ஏழு உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

அதற்கமைவாக, 04 மேலதிக வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது.

மேற்படி சபை அமர்வுக்கு, 6 உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X