Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானமுத்து யோகநாதன் தவிசாளராகவும் பிரதித் தவிசாளராக த.தே.கூவில் கோட்டைக்கல்லாறு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமதி கனகராசா ரஞ்சினியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் பணிகள் முதன்முதலாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இன்று (03) காலை நடைபெற்றுள்ளது.
இந்த முதல் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் ஆரம்பமானது.
முதல் அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 10 உறுப்பினர்களும்; ஐக்கிய தேசியக் கட்சி 04 உறுப்பினர்களும்; தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும்; தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இரண்டு உறுப்பினர்களும்; ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இருவர் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில், தவிசாளரைத் தெரிவுசெய்யும் வகையில் திறந்த வாக்கெடுப்பு கோரியதற்கு இணங்க, திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி தவராணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஞானமுத்து யோகநாதன் ஆகியோருக்கு இடையில் நிலவிய போட்டியின் அடிப்படையில் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராக ஆறு உறுப்பினர்களும் நடுநிலையாக நான்கு பேரும் வாக்களித்தனர்.
இதன்போது, தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு நடுநிலையாக வாக்களிப்பில் கலந்துகொண்டதுடன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago