2025 மே 09, வெள்ளிக்கிழமை

மண்முனை தென்னெருவில்பற்றில் 13 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

2015ஆம் ஆண்டு மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்தில் 38 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக அப்பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் கே.திருச்செல்வம் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியில்  13 டெங்கு நோயாளர்களும் துறைநீலாவணையில் 10 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டனர். ஏனைய பகுதிகளில் இவற்றை விட குறைவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்று திங்கட்கிழமை (11) முதல் 13ஆம் திகதிவரையான தேசிய டெங்கொழிப்பு வாரத்தையிட்டு மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்தில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் பொதுவிடங்களில்;  மூன்று தினங்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன்,  களுவாஞ்சிக்குடி வடக்கு முதலாம் பிரிவில் டெங்கொழிப்பு  வேலைத்திட்டத்தை இன்றையதினம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X