Princiya Dixci / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டம், லிப்ட் நிறுவனம் யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் நிதி அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில் லிப்ட் நிறுவனத்தின் தலைவர் ஞா.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் கே.குருநாதன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வளவாளராக பி.முரளிதரன் கலந்துகொண்டு, வேலைத்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
இந்த வேலைத்திட்டம் காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில் காணி விசேட மத்தியஸ்த சபையை பலப்படுத்தல், கிராம மட்டத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்தல், காணி தொடர்பான பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைத்தல், காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
41 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
2 hours ago