2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மத்திய கிழக்கு செல்வோரில் மட்டக்களப்புக்கு 5ஆவது இடம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களில் மட்டக்களப்பு மாவட்டம் 5ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாக, கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனப் பணிப்பாளர் எஸ். ஸ்பிரிதியோன் தெரிவித்தார்.

'எஸ்கோ' நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் பணிப்பெண்களின் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் வாய்ப்புப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோர் சட்டப்படியான வழிமுறைகளின் மூலம் சென்றால் சட்டப்படியான உதவிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணயகத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

“இதுபற்றி நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை அமுலாக்கி வருகின்றோம்.

“கடந்த 2015ஆம் ஆண்டின் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி, மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் 5ஆவது அதிக எண்ணிக்கையான தொழிலாளர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைத்த மாவட்டமாகவுள்ளது.

“இந்தக் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து 4,111 பெண்களும் 15,870 ஆண்களுமாக மொத்தம் 19,981 பதிவுசெய்யப்பட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.

“இதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரையில் மட்டக்களப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்களில் 460 பேர்  தமது குடும்பங்களுடன் தொடர்பற்றி இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“இவர்களில் தற்போது வரைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சிற்கு 350 நபர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவற்றுள் 250 நபர்களின் தொடர்புகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் இன்னும் 210 நபர்களின் தொடர்புகள் அற்றுப்போயுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் இருந்து  வருவதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .