2025 மே 09, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்தசபை மூலம் 660 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டன

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மத்தியஸ்தசபை மூலம் கடந்த வருடம்  660 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக அப்பிரதேச செயலக மத்தியஸ்த சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன் தெரிவித்தார்.

கடந்த வருடம் பொலிஸ் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட 858 பிரச்சினைகளில் 660 பிரச்சினைகளுக்கு இணக்கம்  காணப்பட்டுள்ளன. இன்னும் 198 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்படாமலுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரண்டு பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக தமது மத்தியஸ்தசபை செயற்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் தமது மத்தியஸ்த சபைக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினூடாக முன்வைக்கப்பட்ட 271 பிரச்சினைகளில், 195  பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளன. மேலும், 76 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்படாமலுள்ளன.
கரடியனாறு பொலிஸ் நிலையத்தினூடாக முன்வைக்கப்பட்ட 32 பிரச்சினைகளில் 30 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளன. மேலும், 02 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்படாமலுள்ளன.

மத்தியஸ்த சபைக்கு நீதிமன்றங்களினூடாக முன்வைக்கப்பட்ட 116 பிரச்சினைகளில் 112 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளன. 04 பிரச்சினகளுக்கு இணக்கம் காணப்படாமலுள்ளன. பொதுமக்களிடமிருந்து 439 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தகராறுகளின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், நேர விரயம், பணச் செலவுகள், பயண நெருக்கடிகள், உற்பத்திப் பின்னடைவு என்பவை தமது மத்தியஸ்த சபை மூலம் முடிந்தளவு குறைக்கப்படுவதாகவும்  அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X