2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை

Freelancer   / 2023 மார்ச் 05 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உணவுத் தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் என உணவுத் தயாரிக்கும் இடங்கள் நேற்று மாலை சோதனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ச.எம்.மாதவன் தலைமையில், அவரது வழிகாட்டலில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  சுகாதார உத்தியோகத்தர்களால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது உணவுப் பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பல உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினா கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகர்கள் நால்வர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மூவருக்கு தலா 10,000 ரூபாய் மற்றும் வர்த்தகர் ஒருவருக்கு 5,000 ரூபாயும் அபராதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் அறவிடப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் நீதவானின் உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X