2025 மே 05, திங்கட்கிழமை

மரணித்த பெண்ணுக்கு தொற்று உறுதி

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்புப் பகுதியில் மரணமடைந்த பெண்ணின் சடலத்தின் மீது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு  கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூம்புகார் வீதியில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்த 83 வயதுப் பெண்ணே, நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

மரணித்த பெண்ணுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,அப்பிரதேசம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்ய இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X