2025 மே 19, திங்கட்கிழமை

மர்மமான முறையில் யானை உயிரிழப்பு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்  மர்மமான முறையில் உயிரிழிந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள அதிகாரிகள் இதனை நேற்று (18) இரவு மீட்டுள்ளனர்.

உயிரிழந்த யானை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானை எவ்வாறு உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அப்பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும், வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள சுற்றுவட்டப் பெறுப்பாளர் ஏ.ஏ. ஹலீம் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X