2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்று, சனிக்கிழமை (03) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், பொலீத்தினால் சுற்றப்பட்டு, மரத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி, பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X