2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மல்யுத்தப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மிதுலாசனுக்கு கௌரவம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மல்யுத்த சபையால் கனிஷ்டப் பிரிவு வீரர்களுக்காக நடத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவன் கிருஸ்ணகுமார் மிதுலாசனை, மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் கௌரவித்தார்.

இந்த மல்யுத்தப் போட்டி, கொழும்பு விளையாட்டமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த மார்ச் மாதம் 24ஆம், 25ஆம் திகதிகளில் நடைபெற்றது.

79 கிலோக்கிராமுக்கு உட்பட்ட திறந்த போட்டியாக இப்போட்டி நடைபெற்றிருந்தது.

சாண்டோ சங்கரதாஸ் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்று வரும் மாணவன் மிதுலாசனுக்கு, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆசிரியர் வே. திருச்செல்வம் பயிற்சி யாளராகச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X