Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் ஏறாவூர்ப் பிரதேசத்தில் புதன்கிழமை(30) நடைபெற்றன.
ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது மௌலவி எல்.எச். அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தினார்.
இதையடுத்து கூட்டுப்பிரசங்கம் நடைபெற்றது. உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏ.எல். சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார்.
மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் மனமுருகி பாவமன்னிப்புக்கோரி பிரார்த்தனை செய்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மிக நீண்டகாலமாக மழை பெய்யாததன் காரணமாக நீர்நிலைகள் வற்றியுள்ளதையடுத்து சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டிலுள்ள பிராணிகள் குடிநீரின்றி அவஸ்த்தைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எம் எஸ் எம் நூர்தீன்
29 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago