Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.திவாகரன்
நாட்டின் பிரதமரும் புத்தசாசன அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, , இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலில், இன்று (08) மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்பட்டது.
நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று நீங்கி, பொமக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென, கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களால் இந்தக் ஹோமம் நடத்தப்பட்டது.
இந்த ஹோம வழிபாட்டில், கோவில் வண்ணக்கர்கள், இந்துக் கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் கே.குணநாயகம் உட்பட சிலர், சுகாதார வழிமுறையின் கீழ் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் அனைத்து மக்களும் நோய்நொடியின்றி வாழ, இறைவனின் அவதாரமாக உள்ள சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றவேண்டுமென, இதன்போது கருத்துத் தெரிவித்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago