Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அனுமதிப்பத்திரமின்றி 5 எருமை மாடுகள் உட்பட 10 மாடுகளை எடுத்துவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட இவர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மூவருக்கும் முப்பதாயிரம் ரூபாயை நீதிபதி எம்.கணேசராஜா அபராதமாக விதித்தார்.
குறித்த மாடுகள் திருடப்பட்ட மாடுகளா தொடர்பான பூரண விசாரணையின் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி மாடுகள் ஒப்படைக்கப்படுமென, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
3 hours ago