Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
காத்தான்குடியில் மாட்டிறைச்சிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சிக்கான விலை நிர்ணயம் செய்யும் விசேட கூட்டம் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள், மாடு வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாட்டு இறைச்சிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இறைச்சி மாத்திரம் 1கிலோ 1800ரூபாவும், முள்ளுடன் இறைச்சி 1கிலோ 1600ரூபாவும் (200கிராம் முள்ளு மாத்திரம்), ஈரல் 1கிலோ 2400ரூபாவும், நுரையீரல்-1கிலோ 1600ரூபாவும், சதை முள்ளு-1 கிலோ 1000ரூபாவும், குடல் 1 கிலோ -900 ரூபாவும், மூளை 500ரூபாவும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயம் எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கும் என்பதுடன், இது தற்காலிகமானதாகும்.அதன் பின்னர் இதை விடவும் குறைந்த விலையில் விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். அத்துடன் இம்மாதம் 20ஆம் திகதி முதல் மாட்டிறைச்சிக் கடைகளில் இலத்திரனியல் தராசு பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
32 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
43 minute ago
1 hours ago