2025 மே 08, வியாழக்கிழமை

மாட்டிறைச்சி விலைத்தளம்பல்: குழு நியமனம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைகளின் சுத்தம், சுகாதாரம், இறைச்சி விலைத்தளம்பல், கால்நடைகளின் தட்டுப்பாடு, இறைச்சிக்கடை நடத்துநர்கள், கால்நடை வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள, பிரதேச சபையின் கண்காணிப்பில் 09 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி விலை, கால் நடைகளை மனிதாபிமானத்துடன் நடத்துதல், நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பான விசேட கலந்துரையாடல், தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.

இவ்விசேட சந்திப்பில் சுத்தம், சுகாதாரம் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் தெளிவான கொள்கைகளையும் அதனை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.ஷிஹாப்தீன் விளக்கமளித்தார்.

ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்களும், மாட்டு வியாபாரிகளும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

குறித்த பகுதிகளில் காணப்படும் இறைச்சிக் கடைகளை முறையாகவும், சுத்தமாகவும்  பேணுதல், நிறுவை தராசுகளை, உடனடியாக பரிசோதனைக்குட்படுத்துதல், தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு கிலோ இறைச்சியை டிசெம்பர் 10ஆம் திகதி முதல் 700  ரூபாய்க்கு விற்பனை செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X