2025 மே 19, திங்கட்கிழமை

மாணவனைக் காணவில்லை

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

ஏறாவூர், தாமரைக்கேணி, ஸாஹிர் மௌலானா வித்தியாயலத்தில் தரம் 6 வகுப்பில் கல்வி கற்கும் 13 வயதுடைய அ. முகம்மது இர்ஷாத் என்ற மாணவனை, கடந்த 1ஆம் திகதி தொடக்கம் காணவில்லையென, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவன், ஏறாவூர் குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனது துவிச்சக்கர வண்டியை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, தான் பஸ்ஸில் காத்தான்குடி செல்லப்போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.

இதற்கமைய, மாணவன் பயன்படுத்திய துவிச்சக்கர வண்டி, குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தினத்தன்று, பாடசாலை முடித்து வீட்டுக்கு வந்த மாணவன், காத்தான்குடியிலுள்ள மதரசாவுக்குச் செல்வதற்காக நீளமான மேற்சட்டை, தலைப்பாகை அணிந்துகொண்டு, துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.  

எனினும், மீண்டும் அவர் வீடு திரும்பவில்லையென குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X