2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘மாவட்டச் செயலகத்துக்கு 355 செயற்றிட்ட உதவியாளர்கள் இணைப்பு’

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சால், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு 355 செயற்றிட்ட உதவியாளர்கள், பயிலுநர்களாக இணைக்கப்பட்டுள்ளனரென, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

இந்த 355 செயற்றிட்ட உதவியாளர்களை, மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களுக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலின் பிரகாரம் அவர்களது பிரதேச செயலகங்களுக்குக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு செயற்றிட்ட உதவியாளராக நியமிக்கப்பட்ட அனைவரும், இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X