கனகராசா சரவணன் / 2018 மே 24 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டையாடச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அவர் நேற்று (23) இரவு உயிரிழந்தாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், சம்பவதினம் இரவு, சட்டவிரோதமான உள்ளூர்த் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது, அவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அவரின் காலில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, செங்கலடி வைத்தியசாலைக்குச் செல்லப்படும்போது, இடைநடுவில் அவர் உயிரிழந்தாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த கரடியனாறு பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025