Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணக்குடா கடற்கரையில் இருந்து படகு, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள், இனந்தெரியாத நபர்களால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அசீட் வீச்சுக்கு உட்படுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
புண்னைகுடாவை சேர்ந்த கி.சபேஸ்கரன் என்பவரது 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களான 3 படகுகள், மீன்பிடி வலைகளே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் அசீட் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
தற்போது கடல் அதிகமாகக் கொந்தளிப்பதனால் மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் உள்ள நிலையில், இந்த நாசக்காரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த 3 படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் 13 மீனவக் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago