கனகராசா சரவணன் / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் வறுமைகளைத் தடுக்கவும் மீன்பிடி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் இரா.துரைரெதத்தினம், மீன்பிடி அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளதுடன், மீனவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீனவர்களைப் பொறுத்தவரையில், சிறப்பாக இயங்காமலுள்ள மீன்பிடிச் சங்கங்களை புனரமைத்தல், உயிராபத்தை விளைவிக்கும் முதலைகளைப் பிடித்து இடமாற்றுதல், அசுத்த நீரை வாவிக்குள் திறந்து விடுவதை தடைசெய்தல், வாவிக்கரைகளில் குப்பை கொட்டுவதை தடுத்தல், வாவியில் இயற்கையாக மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல் என்பன தேவையாக உள்ளனவென, அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மீனவர் 60 வயதை எட்டியதும் மூன்று மாத காலப் பகுதிக்குள் ஓய்வூதியம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், கடற்கரை பிரதேசத்தில் அனுமதியற்ற மீன்பிடியைத் தடை செய்தல், விதிமுறைக்கு முரணாக மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், மீன்பிடி இறங்குதுறையை அமைத்தல் என்பனவும் தேவைகளாக உள்ளன.
இந்தத் தேவைகள் அனைத்தையும் விரைவாகச் செய்து முடிப்பதற்கு மீன்பிடித் திணைக்களத்துக்கு, மீன்பிடி அமைச்சு சகல வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .