Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைவரையும் முகக் கவசம் அணியுமாறு கோரியுள்ளதுடன், அதனைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அந்தவகையில், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் கோரிக்கைக்கு அமைவாக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் ரிபான் 2,000 முகக் கவசங்களை கொள்வனவு செய்து, ஷூரா சபைக்கு அன்பளிப்புச் செய்தார்.
அன்பளிப்பு செய்யப்பட முகக் கவசங்களை கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபை நேற்று (16) வாழைச்சேனை, ஓட்டமாவடி தியாவட்டவான், மீராவோடை, மாவடிச்சேனை, போன்ற பிரதேசங்களில் வீதியில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வழங்கி வைத்தது.
குறித்த செயற்பாட்டுக்கு, கோறளைப்பற்று மத்தி ஆட்டோ சாரதிகள் சங்கம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.கல்குடா கிளை, தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜூம்ஆ மஸ்ஜித், மீராவோடை சலேஞ்சஸ் விளையாட்டுக் கழகம், போன்ற பொது நிறுவனங்கள் உட்பட இளைஞர்கள் பலரும் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago