2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முதற்கட்டமாக 1,700 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சுமார் 4,800 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதற்கட்டமாக 1,700 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என, அம்மாகாணப் பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகோன் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மாகாணத்திலுள்ள  வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 457 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்த அவர், பாடசாலைகளில் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னராக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X