Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் முதலாவது மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக ஆர்.பாஸ்கரன், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெற்ற முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்ட பரீட்சையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரால் உடனயாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவி உயர்வைப் பொறுப்பேற்பதோடு, இந்தப் பதவியை மக்களுக்கு வகைப் பொறுப்புக் கூறும் வகையில் பொறுப்புடையதாகக் கருதி பதிவி வகித்தல் வேண்டும் என்பதுடன் இந்தப் பதவியின் கடமைகளை நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி வினைத்திறனுடனும் தளராத ஊக்கத்துடனும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் நியமனக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்கு விசேட கடமைப் பொறுப்புக்கள் உள்ளதாக நியமன நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago