Freelancer / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும் நாளை (11) முதல் மூடப்படும் என மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும்.
குறித்த பாடசாலைகள் 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பயன்படுத்தப்படும் கிழக்கு மாகாண இரு பாடசாலைகள் எதிர்வரும் 24ஆம் திகதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago