2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

’முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு பணிகள் இறுதிக் கட்டத்தில்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், முன்னாள் பேராளிகள் 12 ஆயிரத்து 282 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவம், நேற்று முன்தினம் (07) மட்டக்களப்பு, டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது இதில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் "இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 12,282 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்துடன் இணைப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவணியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். தற்போது மிகச் சிறிய தொகையினரே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது எமது கடமையாகும். அதனை நாங்கள் செய்து வருகின்றோம். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பட்ட உதவிகளை வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி வருகின்றோம்.

அவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின் அவர்களின் பயணச் சீட்டுக்களுக்கும் பண உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த கால யுத்தத்தினால் இந்த நாடு பின்னடைவையே சந்தித்தது. தற்போது அனைவரும் ஒன்றினைந்து அபிவிருத்தியின் பால் நாட்டை கடடியெழுப்பி வருகின்றோம்." எனக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X