2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மூன்றாவது தடவையும் ’ஜனாதிபதியாக வரமுயல்கிறார்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

அரசமைக்கு அப்பால், மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகிவிடலாம் என்று, ஒன்றிணைந்த எதிரணி, விளைந்து கொண்டிருக்கிறது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 19ஆவது திருத்தத்தில், இரண்டு தடவைகளுக்கு மேல், ஒருவர் ஜனாதிபதிப் பதவியை வகிக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், எனவே இதையும் கடந்தும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால், ஜனாதிபதியாக முடியும் என்று கூறிவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்தால் தான், பல விடயங்களைச் சாதிக்கலாம் என்பதாலேயே, இவ்வாறு அவர்கள் கூறி வருகின்றனர் என்றும், மீண்டும் ஜனாதிபதியாகுவதன் மூலம், தங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தாம் தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X