Editorial / 2020 மே 11 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக மூலிகைச் செங்காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக, ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளிடத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொண்ட காளான் செய்கை, போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் தலைமையில், காளான் செய்கையாளரான ஏ.சித்தி நஸீரா வின் காளான் வளர்ப்புக் கூடத்தில், இன்று (11) அறுவடை செய்யப்பட்டது.
21 நாள்களில் மிகக் குறைந்த உழைப்பிலும் செலவிலும் மேற்கொண்டு அறுவடையைப் பெற்றுக் கொள்ளக் இந்தக் காளான் செய்கை மூலம் அதிக இலாபத்தை ஈட்ட முடியுமென, முர்ஷிதா ஷிரீன் மேலும் தெரிவித்தார்.
காளான் செய்கையை ஊக்குவிப்பதற்காக பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு காளான் செய்கைக்கான அனைத்து தொழினுட்ப வழிகாட்டல்களும் விவசாயத் திணைக்களத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது பிரபல்யமானதொரு பொருளாதாரச் செய்கையாக விளங்கும் 'கெனொடர்மா' என்னும் இந்த வகை மூலிகைக்காளான் உடல் நலத்துக்கு உகந்தது என்று அதன் நுகர்வாளர்களால் நம்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

33 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago
1 hours ago