Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல், மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நேற்று (14) மாலை நடைபெற்றது.
பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வி.தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான ஆர்.பாஸ்கரன் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர், பழைய மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
75 வயதைத் தாண்டிய பழைய மாணவர்களை இதன்போது வரவேற்கப்பட்டதுடன், அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .