Princiya Dixci / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றாணமடு, மாலையர்கட்டுப் பிரதேசத்தில் மோட்டார் ரகக் குண்டொன்று, இன்று (08) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர், வாய்காலில் மேற்படி குண்டைக் கண்டு, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, குண்டு மீட்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடனும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடனும் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026