Janu / 2024 மார்ச் 04 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (04) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த இளைஞன் மற்றுமொரு இளைஞன் ஒருவருடன் , நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்று திரும்பி வருகையில் மோட்டார் சைக்கிளின் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகிலுள்ள மரமொன்றில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் , உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வ.சக்தி

7 hours ago
7 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
28 Apr 2026