2025 மே 07, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை அமர வைத்தால், வழக்கு

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துசார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று சனிக்கிழமை (07), இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம்,  மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158இன் முதலாவது சட்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை இறுதி எச்சரிக்கை வழங்க முடியும் எனவும் அதன் பின்னர் அதே தவறு நடைபெறுமாயின் அவருக்கெதிரா வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனால், மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்லும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள்,  இதனை தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X