Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்
இந்தியாவிலுள்ள பிரம்ம குமாரிகள் உலக ஆன்மிகப் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆன்மிகவாதிகள் மட்டக்களப்புக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளதாக மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் இணைப்பாளர் பி.கே.சுரேந்திரன் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் மூத்த ஆன்மிகவாதிகளான சகோதரர் பி.கே.சூர்யா பாய், ஆஷா பென் மற்றும் கீதா பென் ஆகியோர் மட்டக்களப்பிலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்துக்கு வந்து ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றியதுடன், பிரார்த்தனையும் நடத்தினர்.
இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் இந்தியாவின் இராஜஸ்தானிலுள்ள பிரம்ம குமாரிகள் ஆன்மிகப் பல்கலைக்கழகத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
வேறுபட்ட நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட மக்களிடையே கடந்த 78 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பல்கலைக்கழகம் மூலமாக ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


9 minute ago
12 minute ago
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
16 minute ago
22 minute ago