2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மைதானத்தில் குப்பைகளை வீசிய 2 உணவக உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாகக் குப்பைகளைக் குவித்து மேடாக்கிய குற்றச்சாட்டில்   02 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல்; செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மைதானத்துக்குள் பெருந்தொகையான குப்பைகளை வீசி, மைதானம் அசுப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் அம்மைதானத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

இதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் விசாரணை மேற்கொண்டதுடன், குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டனர். இந்நிலையில், மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை  வண்டிகளில் ஏற்றி, திண்மக்கழிவு அகற்றித் தரப்படுத்தும் திருப்பெருந்துறை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இக்குப்பைகளுக்குள் அப்பிரதேசத்திலுள்ள குறித்த  02 உணவகங்களின் பற்றுச்சீட்டுகளும் காணப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X