2025 மே 09, வெள்ளிக்கிழமை

மின்வெட்டு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை மின்சார சபையின் பராமாரிப்பு வேலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு  மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்தது.

நாளை வியாழக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளிலும் முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நாவலடி, புனாணை, வாகனேரி, ரிதிதென்ன, ஜயந்தியாய, மயிலந்தென்னை ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல்  மாலை 05 மணிவரை கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணி முதல்  மாலை 05 மணிவரை பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகரசபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி -01, லேக் வீதி -02 ஆகிய இடங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X